Download Arafa Anthem
எங்கும் நிறைந்து எழில் வளம் நல்கும் இறைவனைத் துதிக்கின்றோம்.
திங்கள் நபியின் சீரிய வாழ்வைச் சிறப்புற வேண்டுகின்றோம்.
நித்திய ஜீவன் நேர்வழி காட்டி நீய(ல்)லால் வேறில்லை.
இத்தலம் மீதில் இடர்வினை அகற்றி எங்களைக் காத்தருள்வாய்.
சீலம்மிகுந்த சீரிய கல்வி சிறப்புடன் யாம்பெறவே பாலர்பலரும் பண்புடன்கூடி பணிந்து கையேந்துகின்றோம்.
தூய்மை அகமும் சுகமும் உடலும் ஆயெனக் கல்வியையும் அனைத்தும் எமக்கு அளிப்பாய் இறையே அருள்புரி றஹ்மானே.
பாடநெறிகள் பண்பாய் அறிந்து பயனுறு சேவை செய்ய தேடற்கரிய செல்வமாம் கல்வியைக் திருப்தியாய்த் தா இறையே.
பாவவினைகள் பாரினில் ஒழிந்து பல்கலை ஒளி பெறவும்.
மாய நிலைகள் மறைந்து அழிந்திட மார்க்கமும் தா இறையே.
கணிதம், விஞ்ஞானம், கவினுறு அழகியல், சமூகக் கல்வியையும் புனித இஸ்லாம், புகழ் மிகு தொழிற்ற கல்வி, புத்தொழிபெற அருள்வாய்.
அறநெறி புகட்டும் அனைத்துப் பாடமும் அகநிறை பெற்றிடவே மறதி(யி)லா நிலையை மனதினில் நிலைக்க வழங்கிடு எம் இறையே.
அட்டாளைச்சேனை அறபாக் கலையகம் அவனியிற் சிறந்திடவும் மட்டற உயர்ந்து மாண்புகள் பெற்று மானிடம் சிறந்திடவும் திட்டமிடற் கல்வி தெளிவுற நல்கும் திடமுறு ஆசான்கள் நட்டமிலா வாழ்வுநனி சிறந்தோங்க நலன்புரி றஹ்மானே.





